அசாத் சாலிக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!
colombo
court
sri Lanka
asad sally
By Kalaimathy
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Asad Sally) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக மார்ச் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.