சுதந்திர கட்சியில் விஜயதாசவிற்கு எதிரான தடை நீடிப்பு
சிறிலங்கா சுதந்திர கட்சியில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த (Sarathi Dushmantha) ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பதில் செயலாளர் மற்றும் பதில் தலைவராக முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இந்த தடை உத்தரவு இன்று (15) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்தபோதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள்
இதில் பிரதிவாதிகளாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால, பதில் தலைவர் வரய விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலத சில்வா, நீதி அமைச்சர், அதிபர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் பிரதித் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இந்த உத்தரவிற்கு எதிரான ஆட்சேபனைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ். வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு...! இளைஞன் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |