மோசமான வானிலை : கொழும்பு மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நிலவும் மோசமான வானிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் ஏற்படும் அவசரகால பேரிடர் சூழ்நிலைகளை தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (27) கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவின் கூட்டத்தின் போது அவசரகால தொடர்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிரதமர் ஹரிணி தலைமையில் கூட்டம்
அடுத்த 48 மணி நேரத்தில் எதிர்பார்க்கப்படும் மோசமான வானிலையால் ஏற்படக்கூடிய அபாயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் போது, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், அவசரகால சூழ்நிலைகளை உடனடியாகப் புகாரளிப்பதற்காக அவசரகால தொடர்பு எண்கள் கொழும்பு மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
24 மணி நேர அவசர தொலைபேசி எண்
அதன்படி, 24 மணி நேர அதிகாரபூர்வ அவசர தொலைபேசி எண் 117, கொழும்பு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு பிரிவு 0112434028, மற்றும் பேரிடர் மேலாண்மை ஒருங்கிணைப்பு பிரிவு 0112136136 ஆகியவை அறிவிக்கப்பட்டன.

ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவசர ஆலோசனைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |