F-35 போலியான சதி திட்ட உளவுத் தகவல்: நெதன்யாகு மீது கடுங்கோபத்தில் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்கான தனது கோரிக்கையை வெள்ளை மாளிகை புறக்கணித்ததை அடுத்து, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த தனது பயணத்தை இரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக் கோரிக்கை தொடர்பாக நெதன்யாகுவுக்குத் தெளிவான மறுப்பு கிடைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும் ட்ரம்ப் குழுவிடமிருந்து அவருக்கு நிச்சயமாக சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று அமெரிக்காவின் முன்னணி ஊடக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு
ஈரானுக்கு எதிரான போரை ஒன்றாகத் தொடங்கிய சகாக்களான ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே அதிகரித்து வரும் இடைவெளியையும், மாறுபட்ட நலன்களையும் சுட்டிக்காட்டும் அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த நிலைஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் அங்காராவுக்குப் பயணம் மேற்கொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இஸ்ரேலியத் தலைவர் தொலைக்காட்சியில் தோன்றி, துருக்கிக்கு எஃப்-35 ரக போர் விமானங்களை விற்கும் அமெரிக்கத் தலைவரின் நோக்கத்தை விமர்சித்ததைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்றன.
அந்தப் பேட்டியால் ட்ரம்ப் கடுங்கோபமடைந்தார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன. அந்த விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையும் இல்லை என்று அமெரிக்கத் தலைமைத் தளபதி கருதியதாக மற்றொரு அதிகாரி கூறினார்.
மேலும், ட்ரம்ப் துருக்கியில் இருந்தபோது, அவர் அங்காராவில் இருக்கும் பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஈரான் ஒரு கொலைச் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்பது குறித்த உளவுத் தகவல் இருப்பதாக இஸ்ரேலானது அமெரிக்காவை எச்சரித்தது.
இந்த உளவுத் தகவலின் காரணமாக, ட்ரம்பின் விமானப் பயணத்தை பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு மாற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க இரகசிய சேவை அமைப்பு தூண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |