இலங்கைக்கு கடத்தப்பட்ட போலியான சிகரெட்டுகள்! இருவர் கைது
கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான போலியான சிகரெட்டுகள் அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(10) இடம்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் அம்பாறை பேருந்து நிலையத்தில் விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்களை அதிரடிப்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
அட்டைப்பெட்டி
இதையடுத்து, அங்கு இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் 115 அட்டைப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில் 115 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளில் 1150 பாக்கெட்டுகள் இருந்ததாகவும் அவை ஒவ்வொன்றும் ரூபா 50 மதிப்புள்ள 23,000 குச்சிகள் பொதி செய்யப்பட்டு ரூபா 60 முதல் ரூபா 80 வரையிலான சட்டவிரோத சிகரெட்டுகளை இனங்கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடத்தல்
இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் பிம்புரத்தேவ மற்றும் மொனராகலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வந்த காவல்துறையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |