136 மில்லியன் ரூபாவிற்கு போலி பத்திரம் தயாரித்து காணி விற்பனை: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
காணி ஒன்றிற்காக போலி பத்திரம் தயாரித்து 136 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நேற்று (10) ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோட்டா வீதியில் அமைந்துள்ள 87.5 பேர்ச்சஸ் காணிக்காக போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சந்தேக நபர் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.