பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: போலி சோமரத்ன திசாநாயக்க அதிரடி கைது!
இலங்கை திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான சோமரத்ன திசாநாயக்க போல் நடித்து இளம் பெண்களிடமிருந்து நிர்வாண காணொளிகளை பெற்ற ஒருவர் பொல்கஹவெலவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோமரத்ன திசாநாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) சைபர் குற்றப் பிரிவில் அளித்த முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களிடம் வாக்குமூலம்
காவல்துறை விசாரணையில், அந்த நபர் சோமரத்ன திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி போலியான முகப்புத்தக கணக்கை உருவாக்கி, இளம் பெண்களுக்கு நடிக்க வாய்ப்புத் தருவதாக உறுதியளித்து தொடர்பு கொண்டு, அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், பொல்கஹவெலவைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் 2023 முதல் இந்தப் பொய்யான செயலில் ஈடுபட்டு வருவதாகவும், 20 முதல் 35 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 20 பெண்களிடமிருந்து நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபரால் பாதிக்கபட்டுள்ள 06 பெண்களிடமிருந்து காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
