கொள்ளுப்பிட்டியில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சுற்றிவளைப்பு
கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கிவந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரமே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
அந்த இடத்தில் இருந்து 11 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், மருத்துவ அறிக்கைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், வங்கி பற்றுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், பணியகத்தின் இணையத்தளமான www.slbfe.lk இற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் தொடர்புடைய வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லது 1989 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |