தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது - ஆளும் தரப்புக்குள் வந்த உட்பூசல் கருத்து
கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் உள்ளனர் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க
முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொருளாதார நெருக்கடி குறித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது ஏமாற்றமடைந்துள்ள மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒரு வேளை உணவைக் கூட வாங்க முடியாத சூழலில் அரசாங்கம் மக்களை இரண்டு வேளை உணவு உண்பதை ஊக்குவித்துள்ளது. அத்துடன் சில அமைச்சர்கள் தமது சொந்த உணவை வீட்டிலேயே பயிரிடுமாறு மக்களை ஊக்குவிக்கின்றனர்.
உர நெருக்கடியால் உணவுப்
பற்றாக்குறை ஏற்படுவதைக் காண
அரசாங்கத்துக்கு நிபுணர்களின்
ஆலோசனை தேவையில்லையென
சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற
உறுப்பினர், நடைமுறை
வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தப்படாவிடின் தேசத்தின்
வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க
முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.