மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலி!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Rusath Dec 07, 2025 07:51 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த காவல்துறை பிரிவின் தாமரைக்கேணி, சவுக்கடி வீதி நாற்சந்தியில் நேற்று (06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான ரீ. சாமிளா என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

இருவர் படுகாயம் 

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மாலை 04.00 மணியளவில் தனது வசிப்பிடமான நேயம் கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும் அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

மட்டக்களப்பில் கோர விபத்து : குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலி! | Family Woman Dies On The Spot After Hit By Vehicle

அவ்வேளை, தாமரைக்கேணி நாற்சந்தியை அண்மித்த போது சவுக்கடி கடற்கரை பக்கத்திலிருந்து வந்த பிக்கப் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் குறித்த பெண் உயிரிழந்ததுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரியும் அவரது 10 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபத்தில் பலியான பெண்ணின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர் காவல்துறையினர் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ஒப்பரேசன் : அமைச்சர் அறிவிப்பு

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க விசேட ஒப்பரேசன் : அமைச்சர் அறிவிப்பு

மீண்டும் மண்சரிவு அபாயம்: வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

மீண்டும் மண்சரிவு அபாயம்: வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019