தனுஷ்க குணதிலகவிற்கு விமானத்தில் பயணிக்க அனுமதி..!
அவுஸ்திரேலியாவில் கடந்த எட்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு சில பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற தனுஷ்க குணதிலக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவருக்கு நீதிமன்றம் பல்வேறு தடைகளை விதித்திருந்தது.
விமானத்தில் பயணிக்க அனுமதி

இந்தநிலையில், தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவுக்குச் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.