யாழ்ப்பாணத்தின் பிரபல கால்பந்தாட்டவீரர் செம்மணி கோர விபத்தில் உயிரிழப்பு
Jaffna
Accident
Death
By Theepan
யாழ்ப்பாணம் செம்மணியிப் பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்பவித்துள்ளது
பிரபல கால்பந்தாட்டவீரர் மற்றும் சிறந்த நடுவர்
யாழ்ப்பாணம் உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைபந்தாட்ட நடுவருமான யூட் வயது -27 என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி