மகிந்தவின் காட்டு சட்டம் மட்டக்களப்புக்கு வேண்டாம்! டக்ளஸ் தரப்பு எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காட்டு சட்டத்தை மட்டக்களப்புக்கு கொண்டுவரக்கூடாது என மாவட்ட ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (13.10.2025) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறி வாக்களிக்குமாறு கூறியபோது சஜித்துடன் என்ன என்ன உடன்படிக்கை செய்து கொண்டார்கள் என மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெளிவுப்படுத்த வேண்டும்.
பொய் குற்றச்சாட்டு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன் மீது கடுமையான பொய் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
கடற்றொழில் சங்கங்களில் இருந்து பகிரங்க கேள்வி மனுவில் குத்தகை அடிப்படையில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மண்ணெண்னை நிரப்பு நிலையங்களை நான் பெற்றிருக்கிறேன்.
அதனை தவறாக அரச அதிகாரிகளுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் எனக்கு வழங்கப்பட்டது என அவர் கூறியிருப்பது நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அவரிடம் ஆவணங்கள் இருப்பின் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன். நான் சட்டத்திற்கு முரணாக அதை பெற்றுக் கொள்ளவில்லை அதை டக்ளஸ் தேவானந்த தரவும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பொய்யான குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ரணில் வழங்கிய 400 மில்லியன்
அத்தோடு அவர் என் மீது தொடர்ச்சியாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமைக்கான காரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட 400 மில்லியன் ரூபாய் மோசடி இருப்பதை அறிந்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நான் முறைப்பாடு செய்திருக்கின்றேன்.
எனவே சாட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே எனது தொழிலை முடக்குவதற்கு முயற்சி செய்து இவ்வாறு வேலைகளை செய்து என்னை அச்சுறுத்துகிறார்.
கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் 400 மில்லியன் ரூபாவை பெறும் போது சர்வதேச விசாரணையை கோரமாட்டோம் என்றா? அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுக்கமாட்டோம் என்றா? உடன்படிக்கை செய்து கொண்டாரா? இவ்வாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏறி மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு கூறியபோது சஜித்துடன் என்ன உடன்படிக்கை செய்து கொண்டிர்கள்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
