கேள்விக்குறியாகியுள்ள விவசாயிகள் முன்னேற்றம்! ஆலை உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு
ஒரு சில முதலாளிகள் இலாபமீட்டவே அரசு அரிசியை இறக்குமதி செய்கின்றது என வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நெல்லுக்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ள போதிலும், மில் உரிமையாளர்கள் குறித்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய முன்வருவதில்லை.
நெல் கொள்வனவு
எனவே அரசு நெல்லினை கொள்வனவு செய்வதன் மூலமாகவே குறித்த நிர்ணய நிலையினை சரியான முறையில் கடைப்பிடிக்க முடியும். ஆலை உரிமையாளர்களிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் ஐம்பது ரூபாய் குறைத்து கேட்கின்றார்கள்.

இதன் காரணமாக ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடம் இருந்து குறைத்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெரிய ஆலை உரிமையாளர்கள் அறுவடை காலத்தில் குறைந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து சேமித்து வைத்துவிட்டு, சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும்போது அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்.
பொலனறுவை, அனுராதபுரத்தில் உள்ள பெரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை 350, 375 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் கொழும்பிலே கீரிசம்பா, வெள்ளை அரிசி, சம்பா அரிசி போன்றவை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசினால் தெரிவிக்கப்படுவதுடன், மக்களின் தேவைக்காக அரிசியினை இறக்குமதி செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
முன்னைய அரசு காலங்களில் முறையற்ற முறையில் வெளிநாட்டில் இருந்து அரிசியினை இறக்குமதி செய்ததை போன்றே தற்போதும் பார்க்க வேண்டியதாக உள்ளது.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என தெரிவிக்கும் இவ் அரசானது விவசாயிகள் முன்னேறுவதற்கான வழியினை இதுவரைக்கும் செய்யவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |