தொடரும் மர்மங்கள்! ‘கெசல்வத்தை ஃபவாஸ்’ வெட்டிப் படுகொலை
Death
Police
Murder
Colombo
SriLanka
Kesalvattai Fawaz
By Chanakyan
காரில் வந்த மர்மக் குழுவொன்று கொழும்பு - வாழைத்தோட்டம் ஓல்ட் யோர்க் வீதியில் வைத்து நபர் ஒருவரை வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது கெசல்வத்தை ஃபவாஸ் (வயது - 32) என்பவரே இவ்வாறு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தெரியவருகையில்,
இவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாார்.
இந் நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்