பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டவரின் சகோதரர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் வைத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான டொன் நந்தசிறி பிரியந்த குமாரவின்(Diyawadanage Don Nandasiri Priyantha Kumara )சகோதரர் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி அவர் தனது முகநூல் பதிவில் தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமுக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள பயனர்களிடம் கோரியுள்ளார்.
தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.