கடைக்கு சென்ற 15 வயது சிறுமி கடத்தப்பட்டார்...!
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sumithiran
தொலைபேசி அட்டை வாங்குவதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற சிறுமியை யாரோ கடத்திச் சென்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
15 வயது சிறுமியே கடத்தப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தையான 57 வயதுடைய நபரே முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையில் முறைப்பாடு

சம்பவத்தன்று மாலை 4.00 மணியளவில் தொலைபேசி அட்டை வாங்குவதற்காக கடைக்குச் சென்ற சிறுமி திரும்பி வர தாமதமானதால் சிறுமியின் தந்தை கடைக்கு சென்று விசாரித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை காணாத நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.