யாழில் சாதாரண பரீட்சை நிலையத்தில் வெடித்த மோதல் - மாணவர்கள் மீது தாக்குதல்
யாழில் (Jaffna) கா.பொ. த. சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் மாணவர்களிடையே முறுகல் நிலை காரணமாக கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித் சம்பவம் நேற்று (19) காலை 7:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைக்கப்பட்டுள்ள கா.பொ. த. சாதாரண தரப் பரீட்சை நிலையமொன்றில் இரு பாடசாலைகளின் பரீட்சை நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே முறுகல் நிலை
குறித்த பரீட்சை நிலையத்தில் நேற்று காலை 7:30 மணியளவில் இரு பாடசாலை மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
முறுகல் கைகலப்பாக மாறியிருந்த நிலையில் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் முதலாம் பகுதி வினாத்தாள் நேரம் முடிவடைந்த நிலையில் நண்பகல் 11:15 மணியளவில் வெளியில் இருந்து ஒரு தரப்பு பரீட்சை நிலைய வளாகத்தினுள் அத்துமீறி நுளைந்து ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
காவல்துறை பாதுகாப்பு
இதனையடுத்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால் மருதங்கேணி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து பரீட்சை நிலைய மேற்பார்வையாளரினால், எழுத்து மூலமாக பரீட்சை நிறைவு பெறும் வரையான காலம் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு கோரி முறைப்பாடொன்றை மருதங்கேணி காவல் நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பரீட்சை நிறைவடையும் வரை நடமாடும் காவல்துறையினர் பாதுகாப்பினை வழங்க முன்வந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்தி - பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்