நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தில் தள்ளுமுள்ளு – வீடியோ வெளியானது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளை கூட்டத்தில் இடம்பெற்ற தள்ளு முள்ளு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சில வாரங்களின் முன்னர் வண்டன் நோர்த்தோல்ட் விலேஜ் ஹோலில் நடைபெற்ற ஒரு கூட்டத்திலேயே அந்த இழுபறி ஏற்பட்டதாகவும், நா.க.தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர் மற்றொரு முக்கிய பிரமுகரை தாக்க எத்தனித்ததாகவும், தெரியவருகின்றது.
குறிப்பிட்ட அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் நடைபெற்ற சம்பவம் பற்றி கேட்டபொழுது, தமிழ் இனம் வெட்கப்படும்வகையில் குறிப்பிட்ட ஒரு பிரமுகர் நடந்துகொண்டாகவும், சிறிலங்கா அரசே நா.க. அரசாங்கத்தைப் பார்த்துப் பயப்படுகின்ற இந்த நேரத்தில், ஒரு சிலர் ஆடிவருகின்ற கோமளிக்கூத்துகள் ஒட்டுமொத்த அமைப்பின் செயற்பாடுகளையும், அர்ப்பணிப்புக்களையும் கேவலப்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மற்றொருவர் கருத்து தெரிவிக்கும் போது, குறிப்பிட்ட அந்தப் பிரமுகர் தன்னைத் தாக்கவந்ததாகவும், மற்றவர்கள் தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.