பூநகரி உள்ளிட்ட 3 பிரதேச சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 336 உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இம்மாதம் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அத்துடன் குறித்த மூன்று பிரதேச சபைகளில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நாளை மறுதினம்(26) நண்பகல் 12 மணியுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிரவரும் மே மாதம் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
