சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் : மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நேரில் சென்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், போகாவத்த, அக்கரபத்தனை, போடைஸ், சாஞ்சிமலை அத்தோடு பொகவந்தலாவ பகுதியில் டியன்சின் மற்றும் கெம்பியன் பெற்றோசோ ஆகிய பகுதிகளுக்கு அவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துறையாடியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்
இதனுடன், பெருந்தோட்ட தொழிலாளர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் 1700 ரூபாய் சம்பளம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை உடனடியாக முன்னெடுக்கமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |