கனடாவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிப்பு!
Canada
World
By Beulah
இன்றைய தினம் முதல் கனடா ரொறன்ரோவில் புதிய நடைமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு செய்யப்பட உள்ளது.
அபராத தொகை
இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது.
இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகை குறைவானதாக இருப்பதனால், குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் நிலவி வருவதாக காவல்துறையிர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி