யாழ். மணற்காடு சவுக்கங்காட்டில் மீண்டும் தீப்பரவல்!
Jaffna
Fire
Sri Lanka Air Force
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு வானூர்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை
குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

அத்துடன் யாழ் மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு சமூகமளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி