கோப்பாய் காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
CID - Sri Lanka Police
Jaffna
By Theepan
கோப்பாய் காவல் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் நிலையத்தின் பெயர் பலகை உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.
காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை காவல்துறையினர் எரித்த போது, அந்தத் தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பெயர் பலகை மற்றும் மா மரத்தில் பற்றி எரிந்துள்ளது.
தீ விபத்து சேதம்
இந்த விபத்தில் காவல் நிலையப் பெயர் பலகை முற்றாக எரிந்ததுடன், வழக்கொன்றின் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.

இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்