வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அசச்சுறுத்தலாகியுள்ள சீன நிறுவன கடலட்டை வளர்ப்பு நடவடிக்கை!
சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கடலட்டை வளர்ப்பு நடவடிக்கைகள் வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளங்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கின் கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களின் முன் கருத்து வெளியிட்ட மாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள், கடல்வள அழிப்பு மற்றும் வெளிநாட்டு கப்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை அவர்கள் முன்வைத்தனர்.
உரிய நடவடிக்கை
மேலும், சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கடலட்டை வளர்ப்பு நடவடிக்கைகள் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்றொழில் பிரச்சினையில் இருநாட்டு கடற்றொழிலாளர் களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமான மற்றும் அழிவை ஏற்படுத்தும் கடற்றொழில் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடற்றொழிலாளர்களின் உரிமைகள், கடல்வளப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க அரசாங்கம் தெளிவான கொள்கை மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |