வாவியில் காணமல் போன இளைஞன்! இரண்டாம் நாளாகவும் தேடும் பணி தொடர்கிறது
srilanka
police
fisherman
kaththankudi
By Vasanth
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட மஞ்சந்தொடுவாய் வாவியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் நேற்றுடி வியாழக்கிழமை மதியம் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மஞ்சந்தொடுவாய் குசைனியா பள்ளிவாயல் முனையிலுள்ள வாவியில் வலை கட்டுவதற்காகச் சென்ற குறித்த இளைஞர் படகோடு கட்டியிருந்த தோணி நீரில் அடித்துச் சென்றபோது அதனை தடுக்க நீரில் இறங்கிய போதே நீர் ஓட்டம் அதிகமிருந்ததால் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
மஞ்சந்தொடுவாயைச் சேர்ந்த எம்.முனாஸ் (வயது - 24) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்