இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள்

Fishing Sri Lanka SL Protest
By Shalini Balachandran Feb 20, 2024 07:17 AM GMT
Report

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி அடாவடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்ததால் தூதுவராலயம் முன்பாக பெரிமளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் தூதுவராயம் முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலை 11 மணியளவில் கடற்றொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்ட பேரணியாக தூதுவராயத்தை நோக்கி முற்றுகையிட சென்ற போது தூதுவராலயத்திற்கு அருகாமையில் போராட்டகாரர்கள் காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு

போராட்டகாரர்கள் 

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் ஏழு பேர் மட்டும் தூதுவராலயத்திற்கு சென்று தூதுவரைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது போராட்டகாரர்கள் இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள் | Fishermen Protest In Jaffna

இதன் போது “இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி மீனவர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து மற்றும் வடக்கு மீனவர்களின் வளங்களை சூறையாடாதே” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் முக்கிய பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் முக்கிய பொருள்

காவல்துறையினர்

இதன் போது போராட்டகாரர்களை இடைமறித்த காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய தூதுவராலயத்தை முற்றுகையிட்ட யாழ் கடற்றொழிலாளர்கள் | Fishermen Protest In Jaffna

குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த கடற்றொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் பெருமளவிலான காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகரித்தது மின்தேவை : குறைந்துள்ள நீர் மின் உற்பத்தி

அதிகரித்தது மின்தேவை : குறைந்துள்ள நீர் மின் உற்பத்தி

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021