யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்

Jaffna
By Theepan Mar 11, 2026 01:26 PM GMT
Report

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன.

சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையர்களுக்கு வெளிநாடொன்றில் புதிய வேலைவாய்ப்பு களம்

இலங்கையர்களுக்கு வெளிநாடொன்றில் புதிய வேலைவாய்ப்பு களம்

பெற்றோல் குண்டுகள்

சாவகச்சேரி காவல்துறை பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக் குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் | Five Houses Attacked In One Night

மேலும், கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம் வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு, மினிபஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொடிகாமம் காவல்துறை பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

அரசியல்மயமாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை!

அரசியல்மயமாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை!

தப்பியோடிய தரப்பு

இதன்போது வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதேடு இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் | Five Houses Attacked In One Night

அதனையடுத்து கொடிகாமம் காவல்துறை பிரிவிலுள்ள மீசாலை, வடக்குக் கிழக்கு ஊரொல்லையிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த இரண்டு கார்கள், பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நெருக்கியுள்ளனர்.

இதன்போது கிராமத்து இளைஞர்களால் தாக்குதல் மேற்கொண்டவர்களில் 4 பேர் பிடிக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் கொட்டன்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடங்களுக்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016