மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: கொழும்பில் இருந்து இஸ்ரேல் பறக்கவிருக்கும் விமானம்
கடந்த சனிக்கிழமை (13) , ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி தாக்குதல்களின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமானங்கள் இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி கொழும்பில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏப்ரல் 18 ஆம் திகதி காலை ஆர்கியா விமானம் ஒன்று புறப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ஏர்-இந்தியா விமானங்களும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் புது டெல்லியில் இருந்து டெல் அவிவ் வரை மீண்டும் தொடங்கவிருப்பதுடன் கொழும்பில் இருந்து புது டெல்லி வழியாக இஸ்ரேலுக்கு வரும் பயணிகள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பயணச்சீட்டுகள்
மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களைத் தொடங்குகிறது, எனவே அந்த விமானங்கள் வழியாக இலங்கையர்களும் வருகை தர முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது விமானப் பயணச் சீட்டுகளைப் பெற்றுள்ள பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் தமது பயணச்சீட்டுகளை மீள உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |