கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத நிலையில் விமானங்கள்
Bandaranaike International Airport
Sri Lanka
Weather
By Sumithiran
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்காவில் தரையிறங்க முடியாத விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொடருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மாணிக்க கங்கை பிள்ளையாரை மேவி வெள்ளம்
இந்த நிலையில் கட்டுநாயக்காவிலும் பலத்த மழை பெய்து வருவதால் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை கதிர்காமம் பிரதேசத்தில் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் மாணிக்க கங்கை பிள்ளையாரை மேவி வெள்ளம் பாய்ந்த வண்ணம் உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்