வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு

Colombo Jaffna Weather Floods In Sri Lanka
By Thulsi Nov 28, 2024 06:35 AM GMT
Report

புதிய இணைப்பு

சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஓமந்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது அந்த வௌ்ளநீர் வடிந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு | Flood In A9 Road

இதன்படி, ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு

வவுனியா ஏ9 வீதி சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் (Jaffna) செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு | Flood In A9 Road

குறிப்பாக வவுனியா (Vavuniya) நொச்சிமோட்டை, மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - மேலும் இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - மேலும் இரண்டு மாணவர்கள் சடலமாக மீட்பு

வாகன சாரதிகள்

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (27) காலை முதல் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

சிறிநேசன் எம்.பி புலம்பெயர் மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

சிறிநேசன் எம்.பி புலம்பெயர் மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்

இயற்கை சீற்றத்தின் மத்தியிலும் மாவீரர் நினைவேந்தலுக்கு தயாராகும் தமிழர் தாயகம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024