ஒமிக்ரோனை தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட ‘புளோரோனா’- பாதிக்கப்பட்டோர் விபரம் வெளியானது
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன் இலட்சக்கணக்கானோரின் உயிர்களை தற்போதும் பறித்து வருகிறது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உருமாறி புதிய வைரஸ்களாக தோற்றம் பெற்று மேலும் மேலும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறு இறுதியாக தென்னாபிரிக்காவில் புதிய வைரஸான ஒமிக்ரோன் கண்டு பிடிக்கப்பட்டது.அதுவும் தற்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது.
இந்தநிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா’ எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து, ‘புளோரோனா’ (Florona – Flu + Coronavirus) என்ற புதிய வைரஸ் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதன்முறையாக இஸ்ரேல் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெக்ஸிக்கோவின் நயாரிட் மற்றும் ஜலிஸ்கோ மாகாணங்களில் 28 வயது இளம்பெண் உட்பட 3 பேருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.