நேற்று “பூ நிலவு” மே 30 அன்று “நீல நிலவு” மேலும் ஏழு பௌர்ணமி நிலவு
அதி வெசாக் பௌர்ணமியான நேற்று(01) இரவு தோன்றிய பௌர்ணமிக்கு “பூ நிலவு” என்று பெயரிடப்பட்டுள்ளது. வசந்த காலத்தில் நிகழும் பூக்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மாதம் 30 ஆம் திகதி ஒரு அரிய “நீல நிலவு” தெரியும் என்று நாசா நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த நிலவு “நீல நிலவாக” மட்டுமல்லாமல், ஒரு “மைக்ரோ மூன்” ஆகவும் இருக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
சூப்பர் மூனுக்கு எதிரே "மைக்ரோ மூன்" தோன்றும்
சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்போது, ஒரு சூப்பர் மூனுக்கு எதிரே "மைக்ரோ மூன்" தோன்றும். ஒரு "மைக்ரோ மூன்" வழக்கமான பௌர்ணமியை விட சற்றே சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றும்.

மே 30 அன்று வரும் நீல நிலவைத் தவிர, இந்த ஆண்டு மேலும் ஏழு பௌர்ணமிகள் உள்ளன.
திங்கட்கிழமை, ஜூன் 29 – ஸ்ட்ராபெர்ரி மூன்
புதன்கிழமை, ஜூலை 29 – பக் மூன்
வெள்ளிக்கிழமை, ஓகஸ்ட் 28 – ஸ்டர்ஜன் மூன் மற்றும் பகுதி சந்திர கிரகணம்
சனிக்கிழமை, செப்டம்பர் 26 – கார்ன் மூன்
திங்கட்கிழமை, ஒக்டோபர் 26 – ஹண்டர்ஸ் மூன்
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24 – பீவர் மூன் (சூப்பர் மூன்)
புதன்கிழமை, டிசம்பர் 23 – கோல்ட் மூன் (சூப்பர் மூன்)
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |