கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Karuna Amman Pillayan Sarath Fonseka
By Jaso Apr 20, 2025 05:34 AM GMT
Report

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா(karuna) மற்றும் பிள்ளையான் (pillayan)இருவரும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித தகவலையும் வழங்கவில்லை என இறுதிக்கட்டப்போரின்போது இராணுவத் தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். போரை முடிப்பதற்கு கருணா, பிள்ளையான் இருவரும் வழங்கிய தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பொன்சேகா மேலும் தெரிவிக்கையில்,

 கொழும்பில் இருந்த கருணா குழுவிற்கு பாதுகாப்பு

கருணாவிடம் 150 பேர் இருந்தனர். அவர்களில் 80 பேர் சிறுவர் போராளிகள். ஏனைய சிலர் கொழும்பில் இருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினோம். புலிகள் அமைப்பில் இருந்து, வடக்கில் படையினருக்கு எதிராக சண்டை இட்டிருந்தாலும், பிரபாகரன் எங்கிருந்தார் என்ற தகவலைக்கூட கருணா எமக்கு வழங்கவில்லை.

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல் | Fonsekas Statement Regarding Karuna And Pillayan

  அதேபோல நான் போர் செய்த வியூகத்தக்கு அமைய எனக்கு உளவு தகவல்கள் தேவைப்படவும் இல்லை. ஏனெனில் நாம் தலையை தூக்கும்போது எமக்கு அருகில் பயங்கரவாதிகள் இருந்தனர். எனவே, உளவு தகவல்கள் அப்போது தேவைப்பட்டிருக்கவில்லை. எதிரிகள் எங்கு இருக்கின்றார்கள் என கருணாவிடம் கேட்கவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

பிள்ளையான் கைது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை : ராஜித கிண்டல்

பிள்ளையான் கைது மிகப்பெரிய அரசியல் நகைச்சுவை : ராஜித கிண்டல்

புலிகள் தமிழர்களின் இராணுவம்

வாழைச்சேனைக்கு மேல் கஜு வத்தை என்ற ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் மாத்திரமே கருணாவின் படை பயன்படுத்தப்பட்டது. அதுவும் பிரதேசம் தொடர்பில் அனுபவம் இருக்கும் என்பதால் அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அதுவும் தாக்குதலை முழுமைப்படுத்தாமல் காட்டுக்குள் தப்பி வந்துவிட்டனர்.

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேகா வெளியிட்ட தகவல் | Fonsekas Statement Regarding Karuna And Pillayan

எப்போதும் கருணா, பிள்ளையான் எமக்கு உளவு தகவல்களை வழங்கவில்லை. புலிகள் அமைப்பை தமிழர்களின் இராணுவம் என்றே தமிழர்கள் சிலர் கருதினர். புலிகள் தாக்குதல் நடத்தும்போது டயஸ்போராக்கள் சிலர் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புலிகள் அமைப்புடன் மோதினாலும், புலிகள் தமிழர்களின் இராணுவம் என்ற உணர்வு கருணா, பிள்ளையானிடமும் இருந்தது.

இராணுவ முகாம்களுக்குள் கருணாவின் ஆட்களை நாம் வைத்திருக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை  பிள்ளையான் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டதாக முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் : பகிரங்கமாக ஒப்புக்கொண்டது மொட்டு கட்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025