மன்னாருக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் : காணக் குவியும் சுற்றுலாப் பயணிகள்
மன்னார் (Mannar) மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் பறவைகள் வருகை தரும் நிலையில் இம் மாதம் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வர ஆரம்பித்துள்ளன.
புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் மன்னார் அமைந்துள்ளமையால் பல நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் நாடுகளுக்கு செல்கின்றன.
குறிப்பாக சதுப்பு நிலங்களை அண்டிய பகுதிகளில் உள்ளூர் பறவைகளுடன் இணைந்து உணவு உண்ணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.
பறவைகளின் வருகை
ஆனால் மன்னார் மாவட்டத்தில் முன்னைய ஆண்டுகளில் அதிகளவான பறவைகள் வருகை தந்த நிலையில் இம்முறை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புலம் பெயர் பறவைகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தற்போது மன்னார் பகுதிக்கு வருகை தர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்