இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர்,யுவதிகள்(படங்கள்)
Sri Lanka
Sri Lankan Peoples
Tourism
By Sumithiran
இலங்கை மக்கள் பாரியளவில் அசுத்தப்படுத்தியிருந்த அம்பலாங்கொடை கடற்கரையை இன்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டது.
அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தாமதமாக வந்த அதிகாரிகள்

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில உத்தியோகத்தர்களைத் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்தனர்.
அதிகாலையில் சுத்தப்படுத்தும் பணி

அம்பலாங்கொட பொல்வத்த ஆஷிகா செனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டது.