ரணில் மற்றும் அநுரவின் வெளிநாட்டு பயணச் செலவு : விபரங்களை வெளியிட்ட அமைச்சர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 26 மாதகால பதவிக்காலத்தில் மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களுக்காக 1,010 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளார். அதே சமயம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதே காலப்பகுதியில் மேற்கொண்ட எட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக 31.7 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளார் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர் 17, 2022 அன்று ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட பயணம் முதல், ஜூன் 8, 2024 அன்று இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வரையிலான காலப்பகுதியில், ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட 33 வெளிநாட்டுப் பயணங்களின் போது அவருடன் 421 பேர் சென்றுள்ளனர் என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
26 மாதங்களில் எட்டு வெளிநாட்டுப் பயணங்கள்
இதனுடன் ஒப்பிடுகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதவிக்காலத்தின் முதல் 26 மாதங்களில் எட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதுடன், அதற்கான மொத்தச் செலவு 31.7 மில்லியன் ரூபாயாகும்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி இந்தப் பயணங்கள் தொடர்பில் மேலதிக அல்லது கூட்டுப் படிகள் (allowances) எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |