தென்னிந்திய தொலைக்காட்சி துறையை சோகத்தில் ஆழ்த்திய ஸ்ரீராமின் மறைவு
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி மற்றும் கவசம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ஸ்ரீராம் (K.Sriram) இயற்கை எய்தியுள்ளார்.
இன்று (20) காலை மாரடைப்பு காரணமாக காவேரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறைவனடி சேர்ந்துள்ளார்.
இந்து மதம், பஜனைகள் மற்றும் மதச் சொற்பொழிவுகளை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியை வழிப்படுத்தினார்.
ஸ்ரீராம் அவரது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியுள்ளார்.
கே. ஸ்ரீராமின் திடீர் மறைவைத் தொடர்ந்து, தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்புத் துறையினர் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் அன்னாரின் மறைவிற்கு ஐபிசி தமிழ் குடும்பம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
