வாசுதேவவின் கட்சியில் இணைந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்!
Colombo
Vasudeva Nanayakkara
SriLanka
Najeeb A. Majeed
By Chanakyan
ஜனநாயக இடதுசாரி முன்னணியில் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ரியாஸ்தீன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான வாசுதேவ நாணயகாரவிடம் கட்சி அங்கத்துவத்தை நஜீப் ஏ மஜீட் பெற்றுக்கொண்டார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை திருகோணமலை மாவட்டத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் கட்சியின் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி