காலிமுகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதத்தை தொடங்கும் சிறிலங்கா கிரிக்கெட் வீரர்
colombo
Galle Face Green
Former Sri Lanka cricketer
24 hour hunger strike
By Sumithiran
சிறிலங்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளையதினம் (15) கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
நாளை காலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தம்மிக பிரசாத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வாரம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை தம்மிக்க பிரசாத் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி