போர்க்குற்றம் : வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது 25 வருட சிறை
சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொசோவோ போர் குற்றங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
1990-களில் சேர்பியாவிலிருந்து அப்பகுதி வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ரீதியாக அல்பேனியர்களுக்கான 'கொசோவோ விடுதலைப் படையின்' (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததற்காக, 58 வயதான தாச்சிக்கு இன்று புதன்கிழமை அன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாச்சி குற்றவாளி
நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள 'கொசோவோ சிறப்பு மன்றம்' (KSC), மோதலின் போது KLA அமைப்பால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் சேர்பியப் பாதுகாப்புப் படைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாச்சி குற்றவாளி என்று கூறியது.

எனினும் தாச்சி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுதலித்தார். சூட் மற்றும் டை அணிந்திருந்த அவர், தலைமை நீதிபதி சார்லஸ் ஸ்மித் தண்டனை விவரங்களை வாசித்தபோது அமைதியாக நின்றிருந்தார்.
KLA அமைப்பின் முன்னாள் மூத்த தளபதிகள் மூவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this