அரச அலுவலகத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிகள்! கொந்தளித்த சாணக்கியன்
இழப்பீட்டு அலுவலகத்தில் முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இழப்பீட்டு அலுவலகத்தில் நியமிப்பதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
The Ilankai Tamil Arasu Kadchi (ITAK) has written to President Anura Kumara Dissanayake opposing the appointment of ex-military and defence officials to the Office of Reparations.
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) November 6, 2025
For years, families of victims have said they have no faith in domestic accountability. They’ve… https://t.co/72ETGoedJq
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்
"பல ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறலில் நம்பிக்கை இல்லை என்று கூறி வருகின்றனர்.

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களின் துன்பத்துடன் தொடர்புடைய அதே நபர்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்களை நம்ப முடியாது.
அரசாங்கம் ஒரு உள்நாட்டு செயல்முறையை உறுதியளிக்கிறது, ஆனால் இந்த பெயர்கள் நிறைவேறினால், அந்த குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் அது உறுதிப்படுத்தும்," என்று கூறியுள்ளார்.
கவலைகள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கோரி 4 மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |