குற்றப்புலனாய்வு விசாரணையை புறக்கணித்தாரா டிரான் அலஸ்! வழங்கப்பட்டுள்ள பதில்
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான வாக்குமூலங்களை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தமக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தாம் விளக்கமளிக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அவ்வாறு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் டிரான் அலஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாக்குமூலம்
நீதிமன்றத்தினால் வாக்குமூலங்களைப் பெறுமாறு கோரப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் குழுவில் சிலர் ஏற்கனவே வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகத் தமக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை புறக்கணிப்பதற்கு தனக்கு எந்த விருப்பமும் இல்லை எனவும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |