யாழில் நடந்த தொடர் திருட்டு: சிக்கிய முன்னாள் சிப்பாய்க்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழில்(Jaffna) உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேருக்கு யாழ். நிதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 04ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடரப்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன.
கைது நடவடிக்கை
இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய காவல் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தன.
முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில்,கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை களவாடியுள்ளனர் எனவும், மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கைதானவர்களை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் காவல்துறையினரால் சான்று பொருட்கள் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 20 மணி நேரம் முன்
