முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருக்கு பிணை : நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு (Amal Silva) பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (29) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், அமல் சில்வா வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக இறக்குமதி
இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 3 வாகனங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
