ஜப்பான் அரசியலில் திடீர் திருப்பம் : நான்கு அமைச்சர்கள் பதவி துறந்தனர்
Japan
By Sumithiran
ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நிதி சேகரிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் ஜப்பானிய ஆளும் கட்சியின் பலம்வாய்ந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
500 மில்லியன் யென் கணக்குகளில் வைப்பு
2022 வரை 5 ஆண்டுகளாக சுமார் 500 மில்லியன் யென் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையை தொடக்கியுள்ளனர்.
அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சி
அமைச்சர்களின் மோசடியை அடுத்து பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்