திருகோணமலை உவர்மலை பகுதியில் சுற்றிவளைப்பு : மூன்று பெண்கள் உட்பட நால்வர் கைது
திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் காவ்துறையினர் அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது விடுதி பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்கள் விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமையக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |