கிளிநொச்சியில் களத்தில் இறக்கப்பட்ட நான்கு பொலிஸ் குழுக்கள்
Investigation
Police
Kilinochchi
University of Jaffna
By Vasanth
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை உடைப்பு தொடர்பாக சூத்திரதாரிகளை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரிமாதம் 13 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை சேதமாக்கப்பட்டது.
பல்கலைக்கழக வாளகத்தில் உள்ள ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுடன் இணைந்ததாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு பதிலடியாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி