மத்திய தரைக்கடலில் அதிரடி வேட்டை! ரஷ்ய எண்ணெய் கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ்

Ship World Russia
By Amal Jan 25, 2026 08:05 PM GMT
Report

சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் எண்ணெய் கப்பல் ஒன்று பிரான்ஸ் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதுடன், அதன் இந்திய மாலுமி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ், மார்சேய் (Marseille) நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் தி கிரின்ச் (The Grinch) எனும் எண்ணெய் கப்பலின் மாலுமியான 58 வயதுடைய இந்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் 10,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து...! அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் 10,000 இற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து...! அவசரநிலை பிரகடனம்

உலக கப்பல்கள் 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ரஷ்யாவின் ஆர்க்டிக் துறைமுகமான முர்மான்ஸ்க்கில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாகச் சென்று கொண்டிருந்த இக்கப்பல் பிரான்ஸ் கடற்படையால் இடைமறிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடலில் அதிரடி வேட்டை! ரஷ்ய எண்ணெய் கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ் | France Seizes A Russian Shadow Fleet Tanker

கொமோரோஸ் தீவுகளின் கொடியுடன் பயணித்த போதிலும், இது ரஷ்யாவிற்குச் சொந்தமான கப்பல் என்றும், சர்வதேசத் தடைகளில் இருந்து தப்பிக்கப் போலி அடையாளத்தைப் பயன்படுத்துவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய நிழல் உலக கப்பல்கள் மூலம் கிடைக்கும் வருவாய், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு நிதி திரட்ட உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட இந்திய இளைஞர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

கனடாவில் சுட்டுகொல்லப்பட்ட இந்திய இளைஞர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

தடுப்புக் காவல் 

இந்த நிலையில், கைதான இந்திய மாலுமி தற்போது மார்சேய் நகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கப்பலில் இருந்த மற்றைய மாலுமிகளும் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் கப்பலிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய தரைக்கடலில் அதிரடி வேட்டை! ரஷ்ய எண்ணெய் கப்பலைச் சிறைபிடித்த பிரான்ஸ் | France Seizes A Russian Shadow Fleet Tanker

குறித்த கப்பலைச் சுற்றி வான்வழி மற்றும் கடல்வழித் தடைகள் விதிக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, கப்பல் பயன்படுத்திய கொடியின் உண்மைத்தன்மை மற்றும் சர்வதேசத் தடைகளை மீறியமை குறித்து மார்சேய் சட்டத்தரணிகள் அலுவலகம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறீதரனின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு..!

சிறீதரனின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024