பிரான்ஸ் தேர்தல் : புலம்பெயர்ந்தோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
பிரான்சில் (France) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர்ந்தோருக்கு இந்த விடயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட, வலது சாரிக் கட்சியான, National Rally கட்சி பெரும் வெற்றியைப் பெறும் என்றே கூறுகின்றன.
புலம்பெயர்ந்தோர்
ஆகவே, பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோர், இஸ்லாமியர்கள் முதலானோர் கவலையிலும் பதற்றத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை மற்றும் நகர மேம்பாட்டுச் செயலர் பொறுப்பு வகிக்கும் சப்ரினா (Sabrina Agresti-Roubache) பிரான்சில் இன்று வலதுசாரியினருக்கு இருக்கும் இதே ஆதரவு, நமது பெற்றோர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்தபோது இருந்திருந்தால், நாமெல்லாம் பிரான்ஸ் குடிமக்களாக ஆகியிருக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சப்ரினா, Marseille நகரில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தபோது, அவர் சந்தித்த அந்நகர மக்களில் பலரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்கள்.
தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள் என தெரியவருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |